Skip to main content

'அவர்கள் டீ கடைக்காரர் பிரதமர் ஆகிவிட்டார் என்று தற்போதுவரை அழுகிறார்கள்...'- பிரதமர் மோடி

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
modi


நான் பிரதமாரக பதவி ஏற்று நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. அவர்கள் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறார்கள், எப்படி ஒரு டீ கடைக்காரர் பிரதமர் ஆகிவிட்டார் என்று. தற்போது ஒரு டீ கடைக்காரர் கூட பிரதமர் ஆகியதற்கு காரணம் அந்த மாமனிதார்தான் என்பார்கள்.  நான் அவர்களை பார்த்து சவால் விடுகிறேன். நேருவின் குடும்பத்தை விட்டு வெளியே உள்ள ஒரு நல்ல காங்கிரஸாரை கட்சியின் தலைவராக ஐந்து வருடம் வரை பொறுப்பில் வையுங்கள் பின்னர் ஒப்புக்கொள்கிறேன் நேரு ஒரு நல்ல ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார் என்று அம்பிகாபூரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமிதாப் பச்சனுக்கு காங்கிரஸ் நோட்டிஸ்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Kalki 2898 AD: Legal notice served to amitabh bachan for allegedly hurting Hindu sentiments

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக தெரிவித்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மடாதிபதி ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், “இந்தியா என்பது உணர்வுகள், நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதான தர்மத்தின் மதிப்புகளை சிதைக்கக் கூடாது. அதன் வேதங்களை மாற்றக்கூடாது. கல்கி நாராயணன் நம் நம்பிக்கையின் மையத்தில் இருக்கிறார். இவர் விஷ்ணுவின் இறுதி அவதாரமாகக் கருதப்படுகிறார்.

புராணங்களில் கல்கியின் அவதாரம் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பிரதமர் மோடி பிப்ரவரி 19 அன்று ஸ்ரீ கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த படம் நமது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிறது. இந்தப் படம் நமது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே, நாங்கள் சில ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சினிமாக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. துறவிகள் பேய்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எங்கள் நம்பிக்கையுடன் விளையாடலாம் என்று அர்த்தமல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

‘நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல’  - பிரதமர் மோடி பேச்சு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Parliament is for the country, not for the party PM Modi's speech

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று சவானின் முதல் திங்கட்கிழமை. இந்த புனிதமான நாளில் ஒரு முக்கியமான அமர்வு தொடங்குகிறது. சவானின் முதல் திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று முழுவதும் இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். 

Parliament is for the country, not for the party PM Modi's speech

கடந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அரசு, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம். எங்களின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான திசையை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும். இந்த பட்ஜெட் நமது  விக்சித் பாரத் கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த 4.5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் 140 கோடி மக்களால் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் குரலை நசுக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுமார் 2.5 மணி நேரம் பிரதமரின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டு மக்கள் எங்களை நாட்டுக்காக சேவையாற்ற அனுப்பி வைத்துள்ளனர். கட்சிக்காக அல்ல. இந்த நாடாளுமன்றம் நாட்டுக்கானது, கட்சிக்காக அல்ல” எனத் தெரிவித்தார்.