Published on 29/03/2023 | Edited on 29/03/2023
யூபிஐ பரிவர்த்தனை செய்யும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக காலை முதல் செய்திகள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
குறிப்பாக ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் 2000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜி.பே, பே.டி.எம். உள்ளிட்டவற்றில் பரிவர்த்தனை செய்யும்போது அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூடுதல் கட்டணம் பயனாளர்களுக்கா அல்லது வங்கிகளுக்கா என்று தெளிவான விளக்கமில்லாமல் பரவியதால் நெட்டிசன்கள் இதனைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்திய அளவில் இந்த விவகாரம் ட்விட்டர் டிரண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், பே.டி.எம். விளக்கம் அளித்துள்ளது. அதில், தங்களின் வாடிக்கையாளர்கள் யாரும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.