
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் 'பேஷரம் ரங்' அண்மையில் வெளியானது.
படு கவர்ச்சியாக உடை அணிந்து தீபிகா படுகோனே நடனமாடியிருக்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.தீபிகா படுகோனே காவி உடையில் நடனமாடியிருப்பதே இந்த சர்ச்சைக்குக் காரணம். இந்நிலையில் பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத்தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என அயோத்தியைச் சேர்த்த 'அனுமன் காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ் கூறியுள்ளார்.
பாலிவுட் திரைப்படத்துறை தொடர்ந்து சனாதன தர்மத்தைப் பகடி செய்வதாக இருக்கிறது. இதனைத்தடுத்து நிறுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத்தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையைஎரித்து எதிர்ப்பைத்தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)