Terrible fire at the theme park

தீம் பார்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் விசாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 'டைனோசர் பார்க்' என்ற பிரபல தீம் பார்க் உள்ளது. இந்த நிலையில் இந்த பார்க்கில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பார்க்கின் ஒரு பகுதியில் பற்றி எரிந்த தீ, முழுவதும் பரவி ஒட்டுமொத்த தீம் பார்க்கும் பற்றி எரிந்து வருகிறது. அதிகப்படியான கரும்புகை பரவி வருவதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தீ விபத்து நேரிட்ட போது தீம் பார்க்கில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment

தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.