Skip to main content

மீன்பிடித் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து; வெளியான பகீர் காரணம்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Terrible fire at fishing port release of reason

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், படகுகளில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்கிருந்த 30 படகுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. மேலும் 18 படகுகள் பகுதியளவு சேதமடைந்தன. இந்த பயங்கர தீ விபத்து சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

 

அதே சமயம் அடையாளம் தெரியாத நபர், படகுகளுக்குத் தீ வைத்ததாக மீனவர்கள் சந்தேகமடைந்திருந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் படகுகளுக்கான எரிபொருளாக டீசல், பெட்ரோல் ஆகியவற்றைப் படகுகளில் இருப்பு வைத்திருப்பர். மேலும் மீனவர்கள் கடலில் சமையல் செய்ய மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை இருப்பு வைத்திருப்பர். இதன் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் தீ விபத்திற்கான பகீர் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது அணக்காமல் வீசப்பட்ட சிகரெட்டே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த படகில் அமர்ந்து வாசுப்பள்ளி நானி என்பவரும் அவரது மாமா சத்தியம் ஆகிய இரண்டு பேரும் மது அருந்திய பிறகு புகை பிடித்துவிட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசிச் சென்றுள்ளனர். இந்த தீ அருகில் இருந்த நைலான் வலையில் தீ பிடித்து பரவி படகில் இருந்த டீசல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து மற்ற படகுகளுக்கும் தீ பரவியுள்ளது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தீ விபத்து காரணமான வாசுப்பள்ளி நானியும், சத்தியம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்