/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mp-ni_1.jpg)
மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், இன்று (09-03-24) இந்த தலைமைச் செயலகத்தின் 3வது மாடியில் திடீரென தீ பற்றியது. இங்கு பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கி அந்த இடமே புகை மண்டலமானது.
இந்த தீ விபத்து தொடர்பாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)