தெலுங்கானா ராஷ்டிர சமிதி காட்சியைச் சேர்ந்த எம்பி சீனிவாசின் மகன் சஞ்சய். இவர் சாங்கரி நர்ஸிங் மருத்துவக்கல்லுரியை நடத்தி வருகிறார். இக்கல்லுரியைச் சேர்ந்த 11 மாணவிகளை எம்பியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் அளித்திருப்பதாக நிஸாமாபாத் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
"இந்த வழக்கை பற்றி விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்தவுடன் மேலும் இதைப்பற்றி தகவல் அதிகமாக தெரியப்படும்" என்று உதவி ஆணையர் கூறியுள்ளார்.
சஞ்சய் இந்த மாணவிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த புகாருடன் தெலுங்கான உள்துறை மந்திரி நைனி நரசிம்ம ரெட்டி என்பவரை அணுகி இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.