தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி. இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக தெலுங்கானா மாநில சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்த 12 எம்எல் ஏக்கள் டிஆர்எஸ் கட்சியில் இணைத்து கொள்ள சபாநாயகரை வலியுறுத்துள்ளனர். ஏனெனில் கட்சித்தாவும் எம்பி க்கள் மற்றும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டத்தில் இடம் உள்ளது.
தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளதால் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர். சபாநாயகர் சந்திப்பை தொடர்ந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் விரைவில் ஆளுநர் நரசிம்மனை சந்திக்க உள்ளனர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததாலும், கட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டதாலும் இத்தகைய முடிவை, தெலுங்கானா மாநில காங்கிரஸ் எம்எல் ஏக்கள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சித்தலைமை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.