Tej storm formed in the Arabian Sea

அரபிக்கடலில்புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வரும் 25 ஆம் தேதி ஓமன் அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருந்த நிலையில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் இந்த புயல் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் மழையோ, காற்றின் பாதிப்போ ஏற்படுத்தாது என்பதால் மக்களிடையே ஏற்பட்டிருந்த அச்சம் நீங்கியுள்ளது. மேலும் இந்தப் புயலுக்கு தேஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இந்தியா பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment