Published on 18/02/2021 | Edited on 18/02/2021
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் (16.02.2021) உத்தரவிட்டார். மேலும், தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்திரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, இன்று (18/02/2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கிறார். புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் இன்று (18/02/2021) காலை 09.00 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.