Skip to main content

“மத்திய அரசின் திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் புதுச்சேரி  முதலிடம்”  - ஆளுநர் தமிழிசை பெருமிதம்! 

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

tamilisai said Puducherry has been  forefront fully implementing central govt schemes

 

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைகின்றார்கள். மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகின்றது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

 

இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மகளிருக்கு குடும்பத்தில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செலவில் 50 சதவீத கழிவு வழங்கியது பெண்களுக்கு மிகுந்த பயனளித்து வருகின்றது. அந்த வகையில் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லோருக்கும் அரசு உதவித்தொகை கிடைக்கின்றது என்ற நிலையை எனது அரசு உருவாக்கியுள்ளது. எந்த குடும்பமும் சாப்பாடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. இந்த அரசு சொன்னதை நிறைவேற்றும் அரசாக உள்ளது” எனக் கூறினார்.

 

tamilisai said Puducherry has been  forefront fully implementing central govt schemes

 

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “பெண்களுக்கு கையில் பணம் இருந்தால் அது அவரது குடும்ப நன்மைக்கு உதவும் என்பதை உணர்ந்த அரசு, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் அனைத்து திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அதுபோல சுகாதாரத்தில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதலிடம் பெற்று முன்னேறி வருகின்றது என்பதுதான் உண்மை. இந்த அரசு அறிவிக்காததை செய்கின்றது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.