Published on 16/08/2018 | Edited on 16/08/2018

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் வெள்ள பாதிப்பை சரி செய்யவும், அங்குள்ள மக்களுக்கு உதவவும் எல்லா மாநிலங்களூம் முன் வந்துள்ளன.
இந்நிலையில், கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டம் பேட்டை அங்காடி தபால்நிலையத்தின் மாடியில் தமிழக ஜவுளி வியாபாரிகள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.
தபால்நிலைய கட்டிடத்தின் 2 மாடிகள் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் 3வது மாடியில் கடந்த இரண்டு நாட்களாக 70க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தவித்து நிற்பதாக தகவல்.