இந்தியாவில் கரோனா அலைகளின் காரணமாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளபாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவைகளை சுற்றிப்பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றி பார்க்கவும் கட்டுப்பாடுகளோடு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தாஜ்மஹாலை இரவு நேரத்தில் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு மீண்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆக்ரா வட்ட தொல்லியல் அதிகாரி வசந்தகுமார் ஸ்வர்ணகர், நாளை முதல் பொதுமக்கள் இரவு நேரத்தில் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மஹால் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இரவு 8: 30-9, 9-9: 30, 9: 30-10 என மூன்று ஸ்லாட்டுகளில் பொதுமக்கள் தாஜ்மஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வசந்தகுமார் ஸ்வர்ணகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலாவது கரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து, தாஜ்மஹாலை இரவு நேரத்தில் சுற்றிப்பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.