தெருவோர கடைகளில் இருந்தும் கூட ஸ்விக்கி மூலம் உணவு ஆர்டர் செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஊரடங்கில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவினர்களில் ஒருவரான தெருவோர சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தெருவோர கடைகளிலிருந்து ஸ்விக்கி மூலம் உணவு ஆர்டர் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பிரதம மந்திரி ஸ்ட்ரீட் வெண்டார்ஸ் ஆத்மிர்பர் நிதி (PM SVANIDHI) திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலில் இந்தத் திட்டம் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் அமல்படுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.