parliament

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (29.11.2021) தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன்மூலமாகஅவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காககாங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisment

இந்தநிலையில்இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம்முறையிடமுடிவு செய்தனர். இதற்கிடையேநாடாளுமன்றம் கூடிய நிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Advertisment

இதற்கிடையே மாநிலங்களவை கூடியதும், மாநிலங்களவைஎதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறுமாறு சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் வெங்கையா நாயுடு இடைநீக்கத்தை திரும்பப் பெற மறுப்பு தெரிவிக்கவே, மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதவுள்ளனர். மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நாளை நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும், மாநிலங்களவைஎதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும்12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதுதொடர்பாகவெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.

Advertisment

இதற்கிடையே திரிணாமூல்காங்கிரஸ் கட்சி, இடைநீக்கம் செய்யப்பட்ட தங்களது எம்.பிக்கள் இருவரும், நாளை முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரைகாந்தி சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவர்என அறிவித்துள்ளது.