supreme court

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பானவழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்குவந்தது.

Advertisment

ஏற்கனவே, மத்திய அரசிடம்வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கமுடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்திவைப்போம் எனக் கூறியிருந்தது. வேளாண்சட்டம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில், இன்றுபுதிய வேளாண் சட்டங்களுக்குஉச்ச நீதிமன்றம்இடைக்காலத் தடைவிதித்தது. மேலும் விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில், 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பாரதியகிசான் சங்கத்தலைவர் ஜித்தேந்தர் சிங்மன், சர்வதேச கொள்கைகள் குழுத்தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதாரவல்லுநர் அசோக்குலாட்டி, அனில் தன்வத் என்ற மகாராஷ்டிர விவசாயக் குழுத்தலைவர் ஆகியோர்இடம்பெற்றுள்ளனர்.

Advertisment