Skip to main content

வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; 5 மடங்கு உயர்த்தி வழங்கும் திட்டம்...

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

hghghg

 

கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் அங்கு விவசாய கடன் தள்ளுபடி, பசு பாதுகாப்பு  திட்டத்தை மாற்றியமைத்தது என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை மாதம் 600 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதனை மேம்படுத்தி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் வேலையில்லாத பெண்களுக்கு ரூ.3,500 மற்றும் ஆண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருமான திட்டத்தின் முன்னூட்டமாகவே இந்த திட்டம் உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்