Skip to main content

செல்போன் வாங்கித்தராத ஆத்திரத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் செய்த செயல்...

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

tsrh

 

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்க தாமதம் செய்த காரணத்தால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். அந்த மாணவனின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறிது காலம் கழித்து போன் வாங்கி தருவதாக அவர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்கள் கோபமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்து அவரது பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்கள் முதல் 100 நாள் பணியாளர்கள் வரை..; ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிப்பு

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Lakhs of people read book in Pudukottai from students to 100 day workers

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா நடத்த ஆயத்தமாகி வருகிறது.

புதுக்கோட்டை 7 ஆவது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 27 ஆம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் கண்காட்சிகள், கவியரங்கம், கருத்தரங்கங்களும் நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

புத்தகத் திருவிழாவை மாவட்ட மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், "வாசித்தலை நேசிக்க வேண்டும்" என்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற தலைப்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்க, அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வாசிப்பை நேசிக்கும் புத்தகப் பிரியர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வேலை நடக்கும் குளக்கரைகளில் நூறு நாள் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் லட்சம் பேர் வாசித்தனர்.

நூறு நாள் பணியாளர்களும் வேலைத்தலங்ளில் வாசிப்பதைப் பார்த்ததும் சில மூதாட்டிகள் "இதைப் பாக்கும் போது அறிவொளியில் பேரெழுத கத்துக்கிட்டது ஞாபகம் வருதுய்யா" என்றது நெகிழ வைத்தது.

Next Story

மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி? தட்டிக்கேட்டவரை வீடு புகுந்து தாக்கிய கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Government school cleaning with students

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது பைத்தன்துறை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுத்தம் செய்து வருவதாகவும் மாணவர்களைக் கொண்டு குப்பை அல்ல செய்வதாகவும் அதே கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவர்களைக் கொண்டு சுத்தம் செய்தால் இன்னும் நன்றாக சுத்தம் செய்யலாமே எனச்சொல்லி உள்ளார். இது பற்றி அதிகாரிகளுடன் புகார் தெரிவிப்பேன் இனி எப்படி நடக்கக் கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்

இந்த நிலையில், மாணவர்களை எப்படி சுத்தம் செய்ய வைப்பீர்கள் என நீ எப்படி கேட்கலாம் எனப் பைத்தம்துறை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மற்றும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர் பைத்தன்துறை பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை மற்றும் வீடு வைத்துள்ள தீனதயாளனின் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி  உள்ளனர்.

அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தீனதயாளன், அவர்களிடம், “நான் எனது கருத்தை மட்டுமே கூறினேன்..” எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி என்பவர் தீனதயாளனைக் காலணியால் அடித்து  அவரைக் கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் தீனதயாளனை தாக்கியுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்காக கேள்வி எழுப்பியவரை தாக்கியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மீதும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டாம் எனக் கருத்து கூறிய நபரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.