தெரு நாய்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சாலையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதோடு இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பார்க்கவே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
தெலுங்கானா மாநிலம் மங்கிலி என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது. சாலையில் ஓடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதோடு இழுத்துக் கொண்டு ஓட முயன்றது. உடனடியாக அங்கிருந்த முதியவர் ஒருவர் நாயை விரட்டி விட்டார். பின்னர் குழந்தை மற்றும் முதியவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.