சர்தார் வல்லபாய் படேலின் 143 பிறந்தாள் தினத்தையொட்டி நிறுவப்பட்ட உலகின் மிக உயர்ந்த சிலையை உருவாக்க ரூ. 2989 கோடி செலவு செய்யப்பட்டது. இது இந்தியா முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்தார் வல்லபாய் படேல் விடுதலைக்காகவும், இந்திய ஒற்றுமைக்காகவும் போராடியவர்தான் ஆனால் இங்கு மக்கள் இருக்கின்ற நிலையில் இவ்வளவு பெரிய பொருட்செலவு செய்த ஆடம்பரம் தேவைதானா என்று பலர் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதுபோல கேள்விகளுக்கு குஜராத் அரசாங்கம் கொடுத்த பதில், இது மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக மாறும் அதன்மூலம் பணம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இதுகுறித்து மக்களவையில் தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அல்போன்ஸ், “குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27 வரை ரூ.18.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது.ஓராண்டுக்கு தோராயமாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.