/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spic4434.jpg)
டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்ததால், டெல்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அந்த விமானம் சுமார் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென புகை வருவதைப் பார்த்தனர். இது குறித்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)