sputnik v

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த மாதம் இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இம்மாதம் இரண்டு கட்டமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தன.

Advertisment

Advertisment

இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் விலை, ஐந்து சதவீத ஜி.எஸ்.டியோடு சேர்த்து ரூ. 995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்போது அதன் விலை மேலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான பனசியா பயோட், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பான வீடியோவை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தற்போது வெளியிட்டுள்ளது. டாக்டர் ரெட்டி லேபரேட்டரிஸ் என்ற நிறுவனமும் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.