Published on 29/11/2021 | Edited on 29/11/2021
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பவும், இதில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்னர், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்கக் கோரியும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
Congress Party MPs lead by Mrs Sonia Gandhi and Mr @RahulGandhi protest near Gandhi statue in #Parliament House #FarmLaws pic.twitter.com/riAo5o4v4J— Supriya Bhardwaj (@Supriya23bh) November 29, 2021
அப்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறும், குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.