style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்திருக்கிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவரான சோனியா காந்தி கலைஞரின் மறைவு குறித்துஅஞ்சலிகடிதம் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.