Skip to main content

பாம்பின் வாயை கடித்த இளைஞர்-உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்!

Published on 07/09/2024 | Edited on 07/09/2024
Snake-mouthed youth-life-snapping reels craze!

சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போடுவதற்காக சிலர் எடுக்கும் ரிஸ்க் ரொம்பவும் கொடுமையானது. நாகப்பாம்பின் வாயோடு வாய் வைத்து வினோத ரீல்ஸ் போட வேண்டும் என்று நினைத்தார் ஒரு இளைஞர். என்ன நடந்தது தெரியுமா?

தெலுங்கானா – காமாரெட்டி மாவட்டம் – தேசய்யா பேட்டையைச் சேர்ந்தவர் இளைஞர் சிவா. இவரது குடும்பமே பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறது. சிவாவும் சிறுவயது முதலே பாம்பு பிடித்து வந்தார். இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் பகல் நேரத்தில் நாகப்பாம்பு புகுந்தது. உடனே சிவாவுக்கு தகவல் பறந்தது. உடனே அந்த வீட்டுக்கு வந்த சிவா, அந்த நாகப்பாம்பைப் பிடித்ததோடு, அதன் வாயோடு வாய் வைத்துக் கவ்விக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக ரீல்ஸ் எடுத்தார்.

அந்த நேரத்தில், சிவா நாக்கில் அந்தப் பாம்பு கொத்தி இருக்கிறது. ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இருந்த சிவாவுக்கு நாகப்பாம்பு கடித்தது தெரியவில்லை. சற்று நேரத்தில், சிவா மயங்கி விழுந்தான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல் முழுவதும் பாம்பு விஷம் பரவியதால் அவன் இறந்துவிட்டான் என அந்த மருத்துவமனை தெரிவித்தது. ரீல்ஸ் மோகம் சிவா உயிரைப் பறித்து விட்டது. 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.