Published on 18/11/2019 | Edited on 18/11/2019
காஷ்மீரின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியான சியாச்சின் மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகிய நிலையில் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் கடல் மட்டத்திலிருந்து 19000 அடி உயரத்தில் உள்ள சியாச்சினில் அமைந்துள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவு விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.