Published on 06/04/2018 | Edited on 06/04/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழத்தின் இத்தகைய அதிரடியான போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிய வேண்டாம். காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. நதிநீர் பங்கீட்டுக்கு ஒரு அமைப்பை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.