Skip to main content

“போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” - சித்தராமையா 

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Siddaramaiah says Everyone has the right to protest

 

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைத் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், தமிழகத்தில் விவசாய அமைப்புகள், விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதேபோல கர்நாடகாவில், தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த கடையடைப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அத்திப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கும், பந்த் நடத்துவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஊர்வலம் நடத்துவதற்கோ பந்த் நடத்துவதற்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, 144 பிரிவின் கீழ் அனைத்து பகுதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டத்தை யாரும் தங்களது கைகளில் எடுக்கக்கூடாது என்பதையும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதையும் நோக்கமாகக் கொண்டு தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பச்சை மிளகாய் திருடர்களுக்கு கட்டி வைத்து தண்டனை! - ஒரு கிராமத்தின் ஆவேசம்!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Punishment for green chili thieves!

 

கர்நாடகாவில் பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களைப் பிடித்து, தர்ம அடி கொடுத்து, தூணில் கட்டி வைத்த கிராம மக்கள், கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.  

 

கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு, அதிக விலையும் கிடைத்து வருவதால், விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்தப் பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலையில், லக்ஷ்மேஷ்வர் தாலுகாவில் உள்ள யட்டினஹள்ளி கிராமத்தில், விளை நிலங்களுக்குள் புகுந்து பச்சை மிளகாய் திருடிய இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்து,  தர்ம அடி கொடுத்ததுடன், தூணில் கட்டி வைத்து கடும் தண்டனை வழங்கியிருக்கின்றனர். 

 

Punishment for green chili thieves!

 

கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில், பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில்,  அவ்வப்போது அளவு குறைந்து காணாமல் போய் இருப்பது கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததால், நிலங்களைக் கண்காணித்து காவல் காத்து வந்தனர்.

 

திடீரென அதிகாலை வேளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவன் மற்றும் மஞ்சுநாத் ஆகிய இரண்டு இளைஞர்கள் விளை நிலங்களில் புகுந்து, செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு, திருடிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, காவலுக்கு இருந்த விவசாயிகளில் சிலர், அந்த இரண்டு இளைஞர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். 

 

Punishment for green chili thieves!

 

இதனைத் தொடர்ந்து,  அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில், அவர்கள் திருடிய மிளகாய்களுடன், இரண்டு பேரில் ஒருவரைக் கட்டி வைத்து, மற்றொருவரை கட்டப்பட்டவனின் தோளில் மீது ஏற்றி நிறுத்திவைத்து, கடுமையாகத் தண்டித்துள்ளனர். இதன் பின்னர், இத்தகவல் அறிந்து அங்கு வந்த கிராம முக்கியஸ்தர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு ரத்து” - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

SC verdict for Cancellation of the case registered by the ed

 

கர்நாடகத்தைச் சேர்ந்த அலையன்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மதுகர் ஆங்குர் என்பவர் பல்கலைக்கழக சொத்துகளை முறைகேடாக விற்று ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் மதுகர் ஆங்குர் முறைகேட்டில் ஈடுபட உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழகத்தின் மற்றொரு முன்னாள் துணை வேந்தரான பாவனா திப்பூர் என்பவர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. அதுமட்டுமின்றி மதுகர் ஆங்குர் பணப்பரிவர்த்தனை செய்வதற்குத் தன் கணக்கை பயன்படுத்த பாவனா திப்பூர் அனுமதித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வராத குற்றம் தொடர்பாகத் தன் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது தவறு எனக் கூறி பாவனா திப்பூர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பாவனா திப்பூர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்ட வரம்பில் வராத குற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியாது. பி.எம்.எல்.ஏ. சட்ட வரம்புக்குள் வரும் குற்றச்செயல் மூலமாக முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்திருந்தால்தான் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும்” எனக் கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ஐபிசி 120 பி என்ற சட்டப் பிரிவின் கீழ் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்