Shocking information in the investigation about Husband who incident wife, children

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம் பிஜினூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகன் (32). இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி (30) என்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது. இந்த தம்பதிக்கு பயல் (6), ஆனந்த் (3) என இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், ராம் லகன் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த ராம் தங்கியுள்ள வாடகை வீட்டின் கீழ் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர், ராம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு, ஜோதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் பிணமாக கிடப்பதையும், உடல்களோடு ராம் லகன் தங்கி இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஜோதி தனது செல்போனில் அடிக்கடி யாருடனோபேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மனைவி ஜோதியின் நடத்தையில் மீது ராம் லகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு இது தொடர்பாக மீண்டும் ராம் லகன், ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராம் லகன், தனது மனைவி ஜோதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து, மனைவியை கொலை செய்ததை தனது குழந்தைகள் வெளியே கூறிவிடலாம் என்று எண்ணிய ராம் லகன், தனது இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், 3 பேரின் உடலையும் வெளியே எடுத்து செல்ல அச்சத்தில் இருந்த ராம் லகன், 3 பேர் உடலையும் வீட்டிலேயே வைத்து 3 நாட்கள் தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கொலை செய்த ராம் லகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி, குழந்தைகளை கொன்று 3 நாட்கள் கணவர் தங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment