/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a5004.jpg)
தாயின் தன்பாலின சேர்க்கை விவகாரத்தில் மகனையே தாய் கொலை செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆதர்ஷ் நகர் எனும் பகுதியில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இந்த மர்மக் கொலை தொடர்பாக போலீசார் நடத்தியவிசாரணையில் அந்த சிறுவனின் பெயர் ஷ்னேஹன்ங்சு என்பது தெரியவந்தது. சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனுடைய தாயாரே கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலையில் சிறுவனின் தாயார் சாந்தா மற்றும் இஃபாட் பர்வீன் என்ற ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில், சிறுவனின் தாயான சாந்தா தன்பாலின ஈர்ப்பாளர் என்பதும்,இவர் இஃபாட் பர்வீன் என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்தபோதுசிறுவன் பார்த்துவிட்டான் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை வீட்டில் உள்ள மற்றவரிடம் சிறுவன் சொல்லிவிடுவானோ என்று பயந்த சாந்தாவும், இஃபாட் பர்வீன் என்ற அந்த பெண்ணும் சேர்ந்து சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
சாந்தாவின் இந்த தன் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஏற்கெனவே அவருடைய கணவருக்கு தெரிந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் மனைவிக்கு பயந்து கணவர் இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தற்பொழுது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் தன்பாலின ஈர்ப்பு காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)