அந்தேரி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு அணியினரும் கட்சியின் சின்னம் தங்களுக்கு சொந்தம் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் வில்-அம்பு சின்னம் முடக்கம் செய்யப்படுவதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்தேரி (கிழக்கு) தொகுதி தேர்தலில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்புக்கு வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.