கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரிசுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப் அமிர்தசரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மார்பில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி சிவசேனா தலைவர் சுதிர் சூரி உயிரிழந்தது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் இன்று பஞ்சாப் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள பஞ்சாப் சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுதொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.