Skip to main content
Breaking News
Breaking

மதுவின் குடும்பத்துக்கு ஒன்றரை லட்சம் நிதியுதவி வழங்கிய சேவாக்!

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

கேரளாவில் அடித்துக்கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரூ.1.5 லட்சம் நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

 

Shewag

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அத்தப்பாடி என்ற மலைக்கிராமத்தில் மது என்ற மனநலம் குன்றிய இளைஞர், அரிசி திருடியதற்காக சில வாரங்களுக்கு முன்னர் அடித்துக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

நாட்டையே உலுக்கிய இந்தக் கொலைச்சம்பவத்தின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கொலையில் ஈடுபட்டவர்கள் என்று இஸ்லாமியர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு வெளியிட்டு பதிவிட்ட கண்டன ட்வீட் சர்ச்சைக்குள்ளானது. அந்த ட்வீட்டை நீக்கிய சேவாக், தனக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே பதிவிட்டதாக விளக்கம் அளித்திருந்தார். 

 

Shewag

 

இந்நிலையில், சேவாக் மதுவின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவியாக வழங்க முன்வந்துள்ளார். சேவாக் பவுண்டேஷனின் சார்பில் மதுவின் தாயார் மல்லிக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்