Skip to main content

வங்கதேசம் நோக்கி வாருங்கள்... டெல்லியில் ஷேக் ஹசீனா பேச்சு...

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

 

sheik hasina india visit

 

 

அந்த வகையில் நேற்று டெல்லியில் நடந்த உலக பொருளாதார  மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலக அளவில் உள்ள தொழில் முனைவோர், வங்கதேசத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய அவர், நடப்பு ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதார மதிப்பு 8.13 சதவிகிதமாக உள்ளதாகவும், கூடிய விரைவில் இரட்டை இலக்க வளர்ச்சியை வங்கதேசம் அடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வேளாண்மை சார்பாகவும், வங்கதேசம் சணல் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், அரிசி மற்றும் மாம்பழ உற்பத்தியில் நான்காவது இடத்திலும், உள்நாட்டு மீன்வளத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் வங்கதேச தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் உலக நாடுகளில் உள்ள தொழில் முனைவோர், கல்வி, மின்னணுவியல், ஆட்டோமொபைல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய வங்கதேசத்திற்கு வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்