Published on 01/02/2019 | Edited on 01/02/2019
2019-20-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் வருமானவரி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ரூ.6,000 மற்றும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டது. மக்களவையில் பட்ஜெட் தாக்கல் முடிந்த பின் காங்கிரஸ் கட்சின் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘பட்ஜெட் அறிவிப்புகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.500 வைத்துக்கொண்டு விவசாயிகளால் கவுரவத்துடன் வாழ முடியுமா’ என கேள்வி எழுப்பினார். மேலும் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் நடுத்துர வர்க்கத்திற்கான வரிச்சலுகை ஒன்று மட்டுமே சிறப்பு அம்சமாக தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.