ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்திய தண்டனை சட்டம் 124 ஏ (தேசவிரோதசெயல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யாசின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்திருந்த நிலையில் அவருக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் எனத்தேசிய புலனாய்வு முகமை வலியுறுத்தியிருந்த நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வெளியிட்டுள்ளது.