Skip to main content

பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் வழக்கு!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

hindu ram and asianet sashi kumar

 

உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் தெரிவித்தன.

 

இதனையடுத்து, இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே நேற்று (26.07.2021), மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இரண்டு பேர் கொண்ட ஆணையத்தை அமைத்தது.

 

இந்தநிலையில், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என். ராம், ஏசியாநெட் சசிகுமார் ஆகிய இருவரும், பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜின்னாவை கொல்ல முயன்றது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்...” - செங்கோல் விவகாரத்தில் இந்து என். ராம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

"Mountbatten has talked about Jinnah's attempt.." - Hindu N. Ram

 

‘1947 ஆகஸ்ட் 15ல் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோல் விவகாரத்தில் பல கட்டுக்கதைகள் அரசியலில் வந்துள்ளன. உண்மைகள் என்ன என்று தெரிய வேண்டும். எது நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். 

 

சுதந்திரம் இந்தியாவிற்கு கொடுக்கும் நிகழ்வை எப்படி நடத்தலாம் என மவுண்ட்பேட்டன், நேருவிடம் கேட்டதாக பாஜக சொல்கிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டனை பற்றி பலர் ஆய்வு செய்துள்ளனர். எதிலும் இது குறிப்பிடப்படவில்லை. மவுண்ட்பேட்டன் இருந்த இந்தியா குடியரசாக ஆகவில்லை. வைஸ்ராய் என்றால் மன்னரின் பிரதிநிதி. அவர் கவர்னராக ஆகும்போது அனைத்தும் மாறும். எனவே மவுண்ட்பேட்டன் நேருவிடம் கேட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. மவுண்ட்பேட்டன் 1968 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றில் உரையாற்றினார். அந்த உரையில், நேருவிடம் இப்படி கேட்டது செங்கோல் என எந்த ஒரு வார்த்தைகளும் இல்லை. ஜின்னாவை கொல்ல முயற்சித்தது குறித்தெல்லாம் பேசுகிறார். ஆனால் செங்கோல் குறித்து ஒன்றும் பேசவில்லை. இவை அனைத்தும் கட்டுக்கதை. ஆதீனங்கள் நேருவைப் பார்த்தது உண்மை. அதற்கு ஆதாரங்களும் உள்ளது. ஆனால் அவர்கள் கதையில், மவுண்ட்பேட்டன் நேருவை கேட்டபோது ராஜாஜியிடம் பேசினார் என்றும் ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்திடம் பேசியது செங்கோல் தயாரிக்க சொன்னது அது பற்றியெல்லாம் அரசு இணையத்தில் உள்ளது.

 

ஆனால் செங்கோல் எப்போது கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? அதற்கும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்றால் இல்லை. ஆட்சி மாற்றத்தினை குறிப்பிடுவது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய சுதந்திரச் சட்டம் தான். நேருவை இந்தியாவின் பிரதமராக வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் முன்மொழிந்த உடன் இந்தியா சுதந்திர நாடாக மாறியது. அடுத்த நிமிடமே அப்படி நடந்தது. இதுவே நடந்தது. ஆகஸ்ட் 14, 1947ல் காலை 8 மணிக்கு கராச்சிக்கு செல்கிறார் என்றும் 7 மணிக்கு மீண்டும் விமானத்தில் இந்தியா திரும்புவார் என்றுதான் மவுண்ட்பேட்டனின் அன்றைய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடப்பட்டிருப்பது போல் அல்லாமல் 13 ஆம் தேதியே மவுண்ட்பேட்டன் கராச்சி செல்கிறார். எனவே ஆதினங்கள் மவுண்ட்பேட்டனை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆதினங்களுக்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அன்றைய இந்து நாளிதழில் ஆகஸ்ட் 29, 1947 அன்று ஆதினம் விளம்பரம் கொடுத்துள்ளனர். அதில் திருவாவடுதுறை ஆதீனங்கள் சார்பில் நேருவுக்கு செங்கோல் கொடுத்ததாக 3 புகைப்படங்கள் உள்ளது.

 

அதன்படி 14 ஆகஸ்ட் 1947 அன்று இரவு 10 மணிக்கு நேருவின் இல்லத்தில் வைத்து செங்கோல் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தில் போகவில்லை. ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியதாக கூறியுள்ளனர். அதில் குமாரசாமி தம்பிரான், மாணிக்கம் ஓதுவார், ராமலிங்கம் பிள்ளை, சுப்பையா பாரதியார், ஆதீனம் வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை ஆகியோர் சென்றதாக புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

Next Story

பெகாசஸ்; மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை - விசாரணைக்குழு 

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

pegasus

 

பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்க வில்லை என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசி அழைப்புகள்  பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில் "தொழில்நுட்ப குழுவிடம் கொடுக்கப்பட்ட 29 செல்பேசிகளில் 5 செல்பேசிகளில் மட்டுமே வைரஸ் இருந்தது. அனால் அதுவும் பெகாசஸ் தொழில்நுட்பம்  தொடர்பான வைரஸ் தான்  என உறுதியாக கூறமுடியாது" என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீதிபதி ரவீந்திரன் குழு, மூன்று பாகங்களாக தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தது. முதல் இரண்டு பாகங்கள் தொழில்நுட்ப குழுவின் அறிக்கையாகவும்,  மூன்றாம் பாகம் மேற்பார்வைக்குழுவின் அறிக்கையாகவும் (நீதிபதி ரவீந்திரன்) தாக்கல் செய்யப்பட்டது. 

 

இக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், 'நாட்டின் இணைய பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். பொதுமக்களின் தகவல்கள் பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

 

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "பெகாசஸ் தொடர்பான அறிக்கைகள் சில தனிப்பட்ட தகவல்களை கொண்டிருப்பதால் அதை பொதுவெளியில் பகிர முடியாது" என தெரிவித்தார்.