பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நிகழ்த்திய உரையை, தேசிய அளவில் உள்ள அனைத்து மாணவர்களும் பார்த்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, ‘பரிக்ஷா பார் சார்ச்சா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் தேர்வுகள் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சில அரசு இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பட்டன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Modiii.jpg)
இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் பார்த்ததற்கான போட்டோ அல்லது வீடியோ ஆதாரங்களை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த அறிக்கைகள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சேர்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், இதனை மனிதவள மேம்பாட்டுத்துறை மறுத்துள்ளது. மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கக் கூறியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தியிருந்ததாக தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)