Skip to main content

சிறார்களுக்கு மேலுமொரு புதிய கரோனா தடுப்பூசி- நிபுணர் குழு பரிந்துரை?

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

corbevax

 

இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15-18 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இந்தச்சூழலில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த அனுமதி வழங்குமாறு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டதும், ஏற்கனவே இத்தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்துவது குறித்த சோதனைக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள அனுமதி! 

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Carbevax Booster Dose Allowed!

 

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பூஸ்டர் டோஸாக கார்பேவாக்ஸ் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

 

கோவாக்சின் (அல்லது) கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி ஆறு மாதமோ (அல்லது) 25 வாரங்களோ நிறைவடைந்திருந்தால், கார்பேவாக்ஸைப் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்புக்காக 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் கார்பேவாக்ஸ் டோஸை செலுத்திக் கொள்ள கடந்த ஜூன் மாதம் மத்திய மருந்து பொதுக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் (படங்கள்)

Published on 12/03/2022 | Edited on 12/03/2022

 


கரோனா நோய் தடுப்பூசி முகாம் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம், கல்லூரி முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.