Skip to main content

வெற்றி துரைசாமி மாயம்; 7ஆவது நாளாகத் தொடரும் தேடுதல் பணி!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
The search for Vetri Duraisamy continues for the 7th day

இமாச்சலப் பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் மற்றும் ஓட்டுநர் டென்சிங் உள்ளிட்ட 3 பேர் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தனர். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி காரில் வெற்றி துரைசாமியுடன் பயணித்த திருப்பூரைச் சேர்ந்த அவரது நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் சிக்கி பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். அதே சமயம் இந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 6 நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

The search for Vetri Duraisamy continues for the 7th day

இந்நிலையில் விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியை மத்திய பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் 7 வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த வகையில் சட்லெஜ் நதியில் வெற்றி துரைசாமி காணாமல் போன விவகாரத்தில், விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல எடை மற்றும் உயரம் கொண்ட மாதிரி (DEMO) பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் வெற்றி துரைசாமி எவ்வழியாக நதியில் சென்றிருப்பார் என மீட்புக் குழுவினர் சோதனை நிகழ்த்தி அவரைக் கணடறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 சொகுசு கார்களுடன் சென்ற கண்டெய்னர் லாரி; திடீரென தீபற்றி எரிந்தால் பரபரப்பு

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Container lorry carrying 10 luxury cars worth Rs 1.5 crore catches fire midway

1.5 கோடி மதிப்புள்ள 10 சொகுசு கார்களுடன் சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நடுவழியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

பூனே நாக்பூரிலிருந்து  சென்னை நோக்கி 1.5 கோடி மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. சரியாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரியத் துவங்கியது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் உள்ளே இருந்த கார்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தப்பியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் வாலாஜாபேட்டை பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

Next Story

சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Son father by car for property

தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு  சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த 24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன்கள் பெயரில் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை எடுத்துக் கொடுக்குமாறு தந்தை கருப்புசாமியிடம் சின்னதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தோட்டத்திற்கு சாலையில் நடந்து  சென்று கொண்டிருந்த தந்தை கருப்பசாமி மீது சின்னதுரை காரை மோதிவிட்டு கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.