Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று; பரிசோதனை நடத்த உத்தரவு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

covid

 

கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் சமீபத்தில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்களுக்கும், 72 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஜலவார், ஜல்ராபதன் மற்றும் பவானிமண்டி அரசு பெண்கள் பள்ளியில் தலா ஒரு மாணவிக்காவது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பவானிமண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவனுக்கும், ஜலாவர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியின் ஆசிரியருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்குக் கரோனா உறுதியான பகுதிகளில் கரோனா பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்