பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் பீகார் மாநிலம் கத்திஹார் என்னும் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisment

​​​​​​அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளியில் உள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கபட்டது என கூறப்படுகிறது.