சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவரது முதலாவது அரசு முறை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தானில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அங்கு 20 பில்லியன் டாலர்கள் அளவு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து நேற்று இரவு 2 நாள்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். நேற்று டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றனர். அதன்பின் இன்று பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் முன்னிலையில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா குறித்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின் பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், இந்தியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் சவுதி எப்போதும் துணை நிற்கும் என கூறினார்.