
டெல்லியில் கரோனா பாதிப்பு கடந்த இருவாரகாலமாக அதிகரித்துவரும் சூழலில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவருக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையின் மற்றொரு முறையான பிளாஸ்மா சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. அதில் உடல்நலம் தேறிய அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்று அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.