Published on 12/05/2022 | Edited on 12/05/2022
கூகுள் நிறுவனம் 'ட்ரான்ஸ்லேட்' எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட உலக நாடுகளின் பெரும்பாலான மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது சமஸ்கிருதமும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிதாக 24 மொழிகள் கூகுளின் மொழிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பம்பரா, டோக்ரி, போஜ்புரி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 இந்திய மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுதும் உள்ள 133 மொழிகளும், இந்திய மொழிகளில் 19 மொழிகளும் கூகுள் மொழிமாற்ற சேவையில் பயனர்களுக்கு கிடைக்க இருக்கிறது. அவ்வப்போது கூகுள் ட்ரான்ஸ்லேட்டின் தவறான மொழிபெயர்ப்புகள் வெளியாகி ட்ரோலுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.