பெங்களூரு நிறுவனமான ஓலா டாக்ஸிநிறுவனத்தில் ரூ.650 கோடியை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால்முதலீடு செய்துள்ளார். இதுவரை ஓலா நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடுகளிலே இதுதான் அதிகத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியபோது இவரின் பங்குத் தொகையாய்கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை பெற்றார். அதன்பின் அந்தத் தொகையை பல சிறு நிறுவங்களில்முதலீடு செய்துவருகிறார். அந்த வகையில் தற்போது ஓலா நிறுவனத்திலும் ரூ.650 கோடியைமுதலீடு செய்துள்ளார்.