Skip to main content

“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி” - அயோத்தி சாமியார் அறிவிப்பு

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Rs 10 crores for the head of Minister Udayanidhi Stal Ayodhya preacher's announcement

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.

 

மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு  விளக்கமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த எனது பேச்சை கையில் எடுத்துள்ளனர். எதுவுமே மாறக்கூடாது; எல்லாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல். எப்போதுமே பொய் செய்திகளைப் பரப்புவதுதான் பாஜகவின் வேலை. சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று சொன்னார்கள். கோவிலுக்குள் போகக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் ஒவ்வொன்றையும் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார்.

 

Rs 10 crores for the head of Minister Udayanidhi Stal Ayodhya preacher's announcement

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாயை சன்மானமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமன்ஸ ஆச்சாரியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தி கிழித்ததுடன், தீ வைத்தும் எரித்தார். அதே சமயம் டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல் வாரிசு குறித்து அறிவித்த மாயாவதி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mayawati announces political succession

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று (10.12.2023) லக்னோவில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாயாவதி தனது சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார்.

மாயவதியின் சசோதரர் ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த் (வயது 28) ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஆகாஷ் ஆனந்த் லண்டனில் எம்.பி.ஏ. படிப்பை முடித்தவர் ஆவார். மாயாவதியின் அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டாலும், தற்போதைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதியே தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பிரச்சார திட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் ஆகாஷ் ஆனந்த் மாயாவதிக்கு பின்னர் அக்கட்சியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியதும், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானாவிலும் பகுஜன் சமாஜ் கட்சி பணிகளுக்கு பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெள்ள நிவாரணத்தொகைக்கு டோக்கன்; அமைச்சர் உதயநிதி தகவல்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Minister Udhayanidhi information about providing token for flood relief fund

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர்.

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவாரண தொகையாக அரசு வழங்கவுள்ள ரூ. 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 12 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில்,“மத்திய அரசு ஒதுக்கியுள்ள 450 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது. பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 6 ஆயிரம் ரூபாய் போதாது என விமர்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், டெல்லியில் உள்ள மத்திய அரசின் தங்கள் நண்பர்களிடம் வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்றுத்தர வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன்படி10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். .