உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங். ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் கல்யாண் சிங் பதவி வகித்துள்ளார். இந்தநிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கல்யாண் சிங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் இராமர் கோயிலுக்குச் செல்லும் சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயர் வைக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக கல்யாண் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியைத் தவிர லக்னோ, பிரயாக்ராஜ், புலந்த்சஹர், அலிகார் ஆகிய பகுதிகளிலும் தலா ஒரு சாலைக்கு கல்யாண் சிங்கின் பெயர் சூட்டப்படும் எனவும் உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கூறியுள்ளார்.