Skip to main content

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.." ஊரடங்கால் பழைய நிலைக்கு திரும்பிய யமுனை நதி!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வகையான தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொழிற்சாலை கழிவுகள் ஆறுகளில் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கை வாழ்விடங்களும், பெரும் நீர் நிலைகள் முதலியவையும் தூய்மையாகி வருகின்றது. மேலும் அரிதான விலங்குகளின் நடமாட்டமும் சாலைகளில் அதிகம் காணப்படுகின்றன. 

  g



இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு காரணமாக, நீர் நிலைகள் பெரும்பாலும் குடிக்க உகந்ததாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லி வழியாக பாயும் யமுனை நதி கடந்த 30 நாட்களுக்கு முன்புவரை சாயப்பட்டறை கழிவுகளும், தொழிற்சாலை கழிவுகளும் சேர்ந்து ஆறு முழுவதும் நுரையாக காணப்பட்ட நிலையில், தற்போது ஆற்று நீர் தூய்மையாக மாறியுள்ளது. தண்ணீர் குடிக்கும் தரத்தில் இருப்பதாகவும் இது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாற்றம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மது போதையில் ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்; ஒருவர் சடலமாக மீட்பு

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
 Youths who entered the river under the influence of alcohol; Rescue of a dead body

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய நண்பன் ஸ்ரீராம், தேவேந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் இன்று காலையில் பவானி அத்தாணி பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நான்கு பேரும் மது போதையில் ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஸ்ரீதர் மற்றும் தேவேந்திரன் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் மூழ்கியுள்ளனர். இதை கவனித்த அவரது நண்பர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளனர். உடனடியாக மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மீட்புப் படையினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடினர். இதில் ஸ்ரீதர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் உடலை தற்போது வரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். அந்தியூர் அருகே ஆற்றில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.