குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம்புலஸ் மூலம் கடத்த முயன்ற 25 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூரத்தில் உள்ள காம்ரஜ் என்ற காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் 25 ஆயிரம் கோடி கடத்தப்படுவதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். தகவல் அறிந்து அவர் சொன்ன இடத்திற்கு சென்று காத்துக்கொண்டிருந்த போலீசார் அவ்வழியே வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்தனர்.
ஆம்புலன்ஸில் 6 அட்டைப் பெட்டிகளில் 25 கோடியே 80 லட்சம் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அனைத்து பணத்தாள்களிலும் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா என அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் பிடிபட்ட பணத்தாள்களில் ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா என அச்சிடப்பட்டிருந்தது. கள்ள நோட்டுகளாக இருக்குமோ என நினைத்த போலீசார் மேலும் இது குறித்து விசாரணை செய்ததில் சினிமா படப்பிடிப்பிற்காக கொண்டு செல்லப்பட்ட ரூபாய் நோட்டுகளை கள்ள நோட்டுகள் என பறிமுதல் செய்தது தெரிய வந்தது.
மேலும் குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.